
சென்னை: அடிக்கடி மின்தடை ஏற்படும் பகுதிகளை சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்து, மின் தடைக்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை சரி செய்ய வேண்டும் என, மின்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று மாநிலம் முழுவதும் தடையில்லா மற்றும் சீரான மின்விநியோகம் செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மின்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது.