மது​ராந்​தகம்: மது​ராந்​தகம் அருகே நடை​பெற்ற வணி​கர் தின மாநாட்​டில் பங்​கேற்ற முதல்​வர் மு‌.க.ஸ்​டா​லின், தமிழகத்​தில் 24 மணி நேர​மும் கடைகள் செயல்​படு​வதற்​கான ஆணையை மேலும் 3 ஆண்​டு​களுக்கு நீட்​டிப்பு செய்​வ​தாக அறி​வித்​தார். செங்​கல்​பட்டு மாவட்​டம், மது​ராந்​தகத்​தில் வணி​கர் தினத்தை முன்​னிட்டு வணி​கர் சங்​கங்​களின் பேரமைப்பு சார்​பில் வணி​கர் தின மாநாடு நேற்று நடை​பெற்​றது.

இதில், தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் சிறப்பு அழைப்​பாள​ராக பங்​கேற்​றார். அவர், நிகழ்ச்​சி​யில் பேசி​ய​தாவது: வணி​கர் தின​மான மே 5-ம் தேதியை வணி​கர் தின நாளாக அறி​விப்​ப​தற்​கான அரசாணை விரை​வில் வெளி​யிடப்​படும். தமிழகத்​தில் 24 மணி நேர​மும் கடைகள் செயல்​படும் வகையி​லான அறி​விப்​பு, மேலும் 3 ஆண்​டு​களுக்கு நீட்​டிக்​கப்​படு​கிறது. அதே​போல், தமிழகத்​தில் கடைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்​டும் எனக் கேட்​டுக்​கொள்​கிறேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *