மறைமலை நகர்: வணி​கர்​கள் நலனை பாது​காக்க அதி​முக உறு​துணை​யாக இருக்​கும் என்று கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார். தமிழ்​நாடு அனைத்து வணி​கர் சங்​கங்​களின் பேரமைப்​பின் சார்​பில் 42வது வணி​கர் தினம் மற்​றும் 7-வது மாநில மாநாடு மறைமலைநகர் பகு​தி​யில் நடை​பெற்​றது. இதில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி சிறப்பு அழைப்​பாள​ராக பங்​கேற்​றார்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது: எம்​ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வணி​கர்​கள் நலனில் அதிக அக்​கறை கொண்​ட​வர்​கள். சில்​லரை வணி​கத்​தில் அந்​நிய முதலீடு என்று வந்​த​போது மக்​களவை​யில் அந்த மசோ​தாவை அதி​முக எதிர்த்​து. அதி​முக வணி​கர்​களின் வேண்​டு​கோளுக்கு இணங்க இரவு 10 மணிக்கு மேல் கடைகளைத் திறந்து வியா​பாரம் நடத்த சிறப்பு அரசு உத்​தரவு அளிக்கப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *