புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில் நேற்று கோயில் திருவிழா நடைபெற்றது. அப்போது, அந்த திருவிழாவின் ஒருபகுதியாக தேரோட்டமும் நடத்தப்பட்டது. அப்போது, இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில், 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. சில குடிசை வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த மோதலை தொடர்ந்து அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். மேலும், அரிவாள் வெட்டில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

bus

இந்த சம்பவம் நடைபெற்றதை அறிந்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திருச்சி சரக டி.ஐ.ஜி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அதேநேரம், இந்த சம்பவத்தையொட்டி ஏகப்பட்ட வதந்திகளும் பரப்பப்பட்டதால், பொதுமக்களிடம் பதற்றம் அதிகரித்தது. ஆனால், காவல்துறை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளதால், அங்கே மேற்கொண்டு அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கப்பட்டுள்ளது. கோயில் திருவிழாவில் இரு தரப்பினர் இடையேயான மோதலில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *