
சென்னை: தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு வளாகங்களில் ரூ.16.73 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நவீன விளையாட்டு கட்டமைப்புகள், ரூ.3.68 கோடியில் ஸ்டார் அகாடமிகளை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்.
சென்னை நேரு விளையாட்டரங்கம் சென்னை ஒலிம்பிக் அகாடமியில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கலந்து கொண்டார். விழாவில், தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.7 கோடியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள செயற்கை இழை ஓடுதளப் பாதை மற்றும் இயற்கை புல்வெளி கால்பந்து மைதானம், மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.8.25 கோடியில் மறுசீரமைக்கப்பட்டுள்ள செயற்கை இழை ஓடுதளப் பாதை மற்றும் இயற்கை புல்வெளி கால்பந்து மைதானம், திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டுள்ள செயற்கை இழை வளைகோல்பந்து மைதானம் ஆகியவற்றை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.