
பிரபல இந்தி நடிகர் நவாஸுதின் சித்திக். இவர், தமிழில் ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்போது அவர் நடித்துள்ள இந்தி படமான, ‘கோஸ்டா’ (Costao). இதில் நவாஸுதின் சித்திக்குடன் பிரியா பபட், கிஷோர், ஹுசைன் தலால் என பலர் நடித்துள்ளனர். சேஜல் ஷா இயக்கியுள்ள இந்தப் படம் ஜீ5 தளத்தில் வெளியாகி இருக்கிறது.
1990-களில் கோவாவில் சுங்க அதிகாரியாக இருந்தவர் கோஸ்டா பெர்னாண்டஸ். தங்கக் கடத்தலைத் தடுக்க முயன்ற அவர் தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட பிரச்சினைகளை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது. இதன் புரமோஷனில் கலந்துகொண்ட நவாஸுதின் சித்திக், ‘இந்தி சினிமாவில் ஒரிஜினாலிட்டி இல்லை’ என்று கூறினார்.