
நடிகை சமந்தா தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளின் நடித்த சமந்தா, தற்போது தயாரிப்பாளராக மாறியுள்ளார்.
பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கத்தில் மே 9 ஆம் தேதி வெளியாக உள்ள ”சுபம்” என்ற தெலுங்கு படத்தை சமந்தா தயாரிக்கிறார்.
இந்த படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. படத்தின் தயாரிப்பாளரான சமந்தா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
நிகழ்வில் பேசியதாவது, ”நான் எப்போது எல்லாம் விசாகப்பட்டினம் வருகின்றேனோ, அப்போதெல்லாம் ஒரு பிளாக்பஸ்டர் படம் வந்துவிடும். விசாகப்பட்டினத்தில் படமாக்கப்பட்ட மஜ்லி, ஓ பேபி, ஆகிய படங்கள் பெரிய அளவில் ஹிட் அடித்தன” என்று பேசியிருந்தார்.
”ஒரு தயாரிப்பாளராக இந்த படத்தை புதிய யோசனையுடன் தொடங்கினேன்” என்று சுபம் படம் குறித்து சமந்தா கூறினார்.
இந்த நிலையில் அவ்வப்போது சமந்தா மேடையில் கண்கலங்குவதை போன்ற வீடியோக்கள் வைரலாகும். இதற்கு விளக்கம் தெரிவிக்கும் வகையில் சமந்தா தனது instagram பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்..
“அதில் மேடையில் நான் கண்கலங்கி துடைப்பதற்கு காரணம் எமோஷனலாக இருப்பது அல்ல, எனது கண்கள் அதிகமான வெளிச்சத்தை கண்டால் சென்சிட்டிவ் ஆகி, கண்ணீர் வந்துவிடும் இதனால் தான் என் கண்களில் கண்ணீர் வருகின்றது. நான் நன்றாகவும், மகிழ்ச்சியாகவும், ஆர்வத்துடனும் இருக்கின்றேன்” என்று விளக்கம் தெரிவித்துள்ளார்.