
லக்னோ அணிக்கும், பஞ்சாப் அணிக்கும் நேற்று (மே 4) தர்மசாலாவில் ஐ.பி.எல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, ப்ரப்சிம்ரனின் அதிரடி இன்னிங்ஸால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் குவித்தது. அதையடுத்து, 237 என்ற கடினமான இலக்கை நோக்கிக் களமிறங்கிய லக்னோ அணியால், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.
இறுதியில், 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற, அந்த அணியில் 91 ரன்கள் அடித்த ப்ரப்சிம்ரன் ஆட்டநாயகன் விருது வென்றார். புள்ளிப்பட்டியலில் 11 ஆட்டங்களில் 7 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது.
வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் ப்ரப்சிம்ரன், “இதுவொரு நல்ல இன்னிங்ஸ். வெற்றிக்கு காரணமாக அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி. ஒவ்வொரு 2 புள்ளிகளும் முக்கியம். கேட்சிலிருந்து தப்பித்தபோது, அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பினேன்.

ஆரம்பத்தில் பிட்ச்சைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டேன். அதற்கு சிறுது நேரமானது. பின்னர் 200 ரன்கள் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். சூழ்நிலை என்னவாக இருந்தாலும், ஒவ்வொரு ஆட்டத்திலும் எங்கள் பேட்டிங் யூனிட்டிலிருந்து சேர்ந்த ஒருவர் சிறப்பாக வருகிறார்” என்று கூறினார்.