சென்னை: பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி நடந்த ‘தமிழ் வார விழா’ நிறைவு விழா நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்கான நூலுரிமைத் தொகையையும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை கலைவாணர் அரங்கத்தில், பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாடப்படும் “தமிழ் வார விழா” நிறைவு விழாவில், 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்கான நூலுரிமைத் தொகையாக தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *