
சென்னை: வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக விசிக நடத்தவுள்ள பேரணி தொடர்பாக மே 9-ம் தேதி முதல் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக முகநூல் நேரலையில் திருமாவளவன் பேசியதாவது: வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக விசிக சார்பில் மே 31-ம் தேதி திருச்சியில் பேரணி நடைபெறவுள்ளது. இதையொட்டி, மே 8-ம் தேதி சேலம், மே 9-ம் தேதி சென்னை, மே 10-ம் தேதி வேலூர், மே 12-ம் தேதி மதுரை, மே 13-ம் தேதி திருச்சி ஆகிய இடங்களில் பொறுப்பாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபடவிருக்கிறேன்.