
ஒருவழியாக அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தேவிட்டதால், இனி எப்படி கூடுதல் தொகுதிகளைக் கேட்கமுடியும் என்ற கவலையில் இருக்கின்றன திமுக கூட்டணியில் இருக்கும் தோழமைக் கட்சிகள்.
சில வாரங்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, தவெக என சிறிய கட்சிகளுக்கு 4 விதமான கூட்டணி வாய்ப்புகள் இருந்தன. அது இப்போது திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி என இரண்டாக சுருங்கிவிட்டது. அதிமுக, தவெக ஆப்ஷன்கள் இருந்தவரை திமுக கூட்டணி கட்சிகள் தங்கள் பேர வலிமையை அதிகப்படுத்தலாம் என்று கனவுக் கோட்டை கட்டின. அதன் வெளிப்பாடாகவே தங்களுக்கு குறைந்தது 25 தொகுதிகள் வேண்டும் என விசிக நிர்வாகிகள் பொதுத்தளத்தில் கோரிக்கை வைத்தனர்.