
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
இத்தாலி. இந்த நாட்டோட பேர கேட்டதுமே நம்மில் பலருக்கும் நினைவுக்கு வருவது பேஷன்.
இந்த நாடு பேஷன்ல மட்டுமில்ல மற்ற கலைகளிலும் ரொம்பவே பிரசித்தி பெற்றது. அந்த கால மைக்கேலேஞ்சலோ, லியோனார்டோ டா வின்சி மட்டுமில்லாம இந்த காலத்துலயும் கலைகள் மூலமா ஒரு விஷயத்தை நுணுக்கமா ஒரு கவிதை மாதிரி சொல்லுறது குறையவே இல்லை.
இன்னைக்கும் நீங்க இங்க வந்தா பல புதிய கலைநயமிக்க விஷயங்களை கண்டு களிக்கலாம்.
அப்படி, மிலன் நகரத்துல இருக்குற ஒரு அருமையான contemporary art (சமகால கலை) பத்தி தான் இன்னைக்கு நாம பார்க்க போறோம்.
என்ன ரெடிதானே?
மிலன் நகரத்துக்கு நீங்க வரணும்னா இந்த ரெண்டு பெரிய இரயில் நிலையம் வழியா தான் உள்ள வரணும். ஒன்னு Centrale மற்றொன்று Cadorna.
அந்த Cadorna stationக்கு வெளிய தான் நாம இன்னைக்கு பார்க்க போற அந்த கலை பொக்கிஷம் இருக்கு.
இதோட பேரே கொஞ்சம் வித்தியாசம் தான். அது “ஊசி நூல் முடிச்சி” சிலை.
நடு ரோட்டுல எதுக்கு இப்படி ஊசி நூல் வச்சி தைச்ச மாதிரி ஒரு கலைன்னு தானே நினைக்குறீங்க?
மேலோட்டமா பார்த்த இது வெறும் ஊசி நூல் போல தான் தெரியும். பார்ப்பவருக்கு ஏதோ மிலன் நகரத்துக்கே உரிய பேஷன் கலைய வெளிப்படுத்துற ஒரு சாதாரண கலையா மட்டுமே தோற்றம் அளிக்கும்.
ஆனா இதோட விளக்கத்தை நான் சொன்னதுமே “ஆஹா கவிதை கவிதை”னு நீங்க என்னை பாராட்ட போறீங்க.

இதை வடிவைச்சது Coosje van Bruggen & Claes Oldenburg அப்பிடின்ற ஒரு தம்பதியர் தான். 1990ம் வருடத்துல இந்த ரயில் நிலையம் மறுசீரமைப்பு செய்யப்பட்டாலும், 2000ம் வருடம் தான் இந்த கலைப்பொருளை இங்கே நிறுவினார்கள்.
மிலன் நகரத்துல நீங்க நெனைச்சி பார்க்குற எல்லா தரை போக்குவரத்தும் இருக்கும். அந்த கால டிராம் முதல், இந்த கால மின்சார பேருந்து வரைக்கும், சைக்கிள் ரிக்க்ஷா முதல் Limousine வரை, எல்லாமே இருக்கும்.
ஒன்னரை மில்லியன் மக்கள் இருக்கும் அந்த நகரத்தை ரொம்பவே இணக்கமா வச்சிருப்பது subway என்று சொல்லப்படும் மெட்ரோ ரயில் தான். இப்படி அந்த நகரத்துக்கு உயிர் நாடியா இருக்குற அந்த மெட்ரோ ரயிலை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டது தான் இந்த கலை.
இது ரெண்டு பகுதியா கட்டப்பட்டிருக்கு. ரோட்டுக்கு ஒரு பக்கம் ஊசி நூல் குத்தின மாதிரியும், மற்றொரு பக்கம் அந்த நூலோட மறுமுனை இருக்குற மாதிரியும் இருக்கும்.

இந்த ரெண்டையும் ஒரு கற்பனை நூல் நிலத்தின் கீழே இணைந்து இருப்பது போல் இருக்கும்.
இது மிலன் நகரத்தின் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதிபலிக்கும் ஓர் அங்கமாக வடிவமைக்கப்பட்டது. எப்படி மிலன் நகரத்து மெட்ரோ ரயில்கள் அந்த நகரத்தை இணைச்சி வச்சிருக்கோ அது மாதிரி.
இதை வடிவமைச்ச சமயங்களில் மிலன் நகரத்துல மூன்று தடங்கள் மட்டுமே இருந்தது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம்.
அந்த மூன்று நிறம் தான் இந்த கலையில் உள்ள சிவப்பு மஞ்சள் மற்றும் பச்சை அப்பிடின்னு இந்நேரம் கண்டு பிடிச்சிருப்பீங்களே?
கெட்டிக்காரங்க தான் நீங்க.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.