
சென்னை: அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க துடிக்கும் பாஜக அரசை எதிர்க்கும் வழியை இந்திய மக்களுக்கு தமிழகம் காட்டியிருக்கிறது என அகில இந்திய காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ‘அரசியலமைப்பை காப்பாற்றுவோம்’ என்ற தலைப்பில் அரசியல் மாநாடு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
கட்சியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை மாநாட்டுக்கு தலைமை வகித்து, ‘இந்திய அரசியலமைப்பு’ புத்தகத்தை காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு வழங்கினார். ‘ஒருமித்த குரலோடு, ஒற்றுமையான கைகளோடு இந்திய தேசத்தை பாதுகாப்போம்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.