
புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் போலீஸுக்கும், நாட்டுக்கும் சேவையாற்றவே பிறந்துள்ளேன் என்று ஸ்ரீநகரில் பணியாற்றும் போலீஸ் அதிகாரி உருக்கமாகத் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர் இப்த்கார் அலி (45). இவர் ஜம்மு-காஷ்மீர் போலீஸில் பணியாற்றி வருகிறார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற இந்திய அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், ரஜவுரி, ஜம்மு மாவட்டங்களைச் சேர்ந்த 24 பேரை வெளியேற்ற ஜம்மு-காஷ்மீர் அரசு உத்தரவிட்டது. இதில் இப்த்கார் அலி மற்றும் அவரது குடும்பத்தாரும் அடங்குவர். இதையடுத்து அவர்கள் பஞ்சாப் எல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.