
சென்னை: அதிகரித்து வரும் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் 4 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எழும்பூர் – தஞ்சாவூர் உழவன் விரைவு ரயிலில் (16865- 16866) இரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி இணைக்கப்படவுள்ளது. இதேபோல் சென்னை எழும்பூர் – கொல்லம் விரைவு ரயிலிலும் (16101- 16102) இரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத பெட்டி ஜூலை 1-ம் தேதி முதல் இணைக்கப்படுகிறது.