
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவா் ஏ.ஆா். ரஹ்மான்.
படங்களுக்கு இசையமைப்பதோடு மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
அந்தவகையில் மும்பையில் நேற்று இரவு ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார்.
முழு எனர்ஜியோடு ஏ.ஆர்.ரஹ்மான் பாடியதைக் கேட்டு ரசிகர்கள் வைப் ஆகி இருக்கின்றனர். கூடுதல் சிறப்பாக இந்த இசை நிகழ்ச்சியில் நடிகர் தனுஷும் கலந்துகொண்டிருக்கிறார்.
குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மானுடன் உடன் சேர்ந்து ராயன் படத்தில் இடம்பெற்ற ‘அடங்காத அசுரன்’ பாடலைப் பாடி அசத்தி இருக்கிறார்.
இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனுஷ் நடித்து வரும் இந்தி படமான ‘தேரே இஸ்க் மெயின்’ படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைக்கிறார். இப்படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வட இந்தியாவில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#ARRahman & #Dhanush set Mumbai on fire yesterday " Adangatha Asuran " Song. @arrahman #Wondermenttour #Mumbai pic.twitter.com/GFTVunQyot
— A.R.Rahman News (@ARRahman_News) May 4, 2025