
மீண்டும் பெரிய நடிகர்களுடன் இணைந்து படங்கள் தயாரிக்க முடிவு செய்திருக்கிறது லைகா நிறுவனம்.
‘வேட்டையன்’, ‘இந்தியன் 2’ உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்த நிறுவனம் லைகா. இந்நிறுவனம் தொடர்ச்சியாக பல்வேறு பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வந்தது. ஆனால், இந்நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்புகள் தோல்வியை தழுவியது. இதனால் படத்தயாரிப்பினை சில காலத்துக்கு நிறுத்தியது.