
‘கூலி’ முழுப்படமும் பார்த்துவிட்டதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.
நீண்ட மாதங்களாக பேட்டி எதுவும் அளிக்காமல் இருந்தார் அனிருத். தற்போது தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியொன்றை அளித்திருக்கிறார். அதில் ‘கூலி’ படத்தின் அப்டேட்டை கொடுத்திருக்கிறார். அப்பேட்டியில் அடுத்தடுத்த படங்கள் குறித்து அனிருத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.