
புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய விமானப்படைத் தளபதி ஏர்மார்ஷல் அமர் பிரீத் சிங், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் இன்று (மே.4) சந்தித்தார். முன்னதாக நேற்று (சனிக்கிழமை) பிரதமர் மோடியை கடற்படையின் தலைமை அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி சந்தித்த நிலையில் இன்று விமானப் படை தளபதியின் சந்திப்பு நடந்துள்ளது.
இந்தச் சந்திப்பானது பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகள் தலைமைத் தளபதி அணில் சவுகான் மற்றும் முப்படைத் தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்துக்கு சில நாட்களுக்கு பின்னர் நடக்கிறது.