
கோவா மாநில கோயிலில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 22 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கோவா மாநிலத்தின் ஷிர்காவ் பகுதியில் புகழ்பெற்ற ஸ்ரீ தேவி லைராயி கோயில் அமைந்துள்ளது. இது, கோவா தலைநகர் பனாஜியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கிறது. ஆண்டுதோறும் மே மாதத்தில் ஸ்ரீ தேவி லைராயி கோயிலில் பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் பங்கேற்க கோவா மட்டுமன்றி, மகாராஷ்டிரா, கர்நாடகாவை சேர்ந்த பக்தர்கள் விரதமிருந்து புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.