
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு உளவுத் தகவல்களை கொடுத்ததாக ராஜஸ்தானைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டம் ஜீரோ ஆர்டி மோகன்கர் பகுதியைச் சேர்ந்தவர் பதான் கான். இவரை ராஜஸ்தான் புலனாய்வுத்துறை போலீஸார் நேற்று கைது செய்தனர். இவர்பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உளவு பார்த்து தகவல்களைப் பரிமாறி வந்துள்ளார். இதுதொடர்பாக கடந்த சில வாரங்களாக இவரைக் கண்காணித்து வந்த ராஜஸ்தான் போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். இவர் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அதிகாரிகளுக்கு இந்திய சிம்கார்டுகளை வழங்கியுள்ளார். மேலும் உளவுப் பார்த்து தகவல்களை சொன்னதற்காக அதிக அளவில் பணத்தையும் பெற்று வந்துள்ளார்.