
பெங்களூரு: கர்நாடக வீட்டு வசதித் துறை அமைச்சர் ஜமீர் அகமது கான், ஹொசப்பேட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாம் அனைவரும் இந்தியர்கள். பாகிஸ்தானுடன் நமக்கு எந்த உறவும் கிடையாது. பாகிஸ்தான் நம்மை எதிரியாக நினைக்கிறது. பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்டால், நான் சண்டையிட தயார். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அனுமதி அளித்தால் நான் பாகிஸ்தானுக்கு தற்கொலை படையாக செல்ல தயாராக இருக்கிறேன்.
மத்திய அரசு எனக்கு ஒரு தற்கொலை வெடிகுண்டை அளித்தால் எனது உடலில் கட்டிக் கொண்டு பாகிஸ்தானுக்கு சென்று எதிரிகளை தாக்குவேன். இதனை நான் வெறும் வார்த்தைகளுக்காக கூறவில்லை. அல்லா மீது ஆணையாக கூறுகிறேன். நமது எதிரிகளை அழிப்பதற்காக நான் எனது உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு ஜமீர் அகமது கான் தெரிவித்தார்.