
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் கட்சிகளை பாஜக கூட்டணிக்கு இழுங்கள் என்று சென்னையில் நடைபெற்ற பாஜக மையக் குழு கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியிருக்கிறது. இரு கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. இதன் தொடர்ச்சியாக பாஜக தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் தமிழகத்துக்கு தொடர்ந்து வருகை தந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா சென்னை வந்தார்.