
தெரு நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகளை துரிதப்படுத்தவும், அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கீடு மற்றும் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (2.5.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், நகரப் பகுதிகளில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொதுமக்களுக்கு பாதிப்புகளும் அச்சுறுத்தலான சூழலும் நிலவுவதை கருத்தில்கொண்டு, இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.