விலங்குகள் மீதான அதீத பாசத்தால், இளம் பெண் ஒருவர் தனது எம்பிபிஎஸ் படிப்பை விட்டு விட்டு தெரு விலங்குகளை பராமரித்து வருகிறார். எம்பிபிஎஸ் படிப்பை விட்டதும் இல்லாமல், இந்த விலங்குகளை பராமரிப்பதற்காக தனது சேமிப்பு பணத்தையும் செலவிட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த த்ரிஷா படேல், எம்பிபிஎஸ் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, ஆதரவற்ற விலங்குகளுக்கு புது வாழ்க்கை அளித்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில், 350-க்கும் மேற்பட்ட விலங்குகளுக்கு இவர் புதிய வாழ்க்கையை அளித்துள்ளார்.

சிறு வயதிலிருந்தே விலங்குகள் மீது அதிக பாசம் கொண்ட த்ரிஷா தான் படித்துக் கொண்டிருந்த எம்பிபிஎஸ் படிப்பை விட்டு விட்டு தெருக்களில் காயமடைந்த அல்லது ஆதரவற்ற விலங்குகளை பராமரிக்கத் தொடங்கிவிட்டார்.

தங்களின் வலியை வெளிப்படுத்த முடியாத குரலற்ற விலங்குகளுக்கு தனது சேவையை தொடர ஒரு துணிச்சலான முடிவு எடுத்தார். இதற்காக கால்நடை மருத்துவர் படிப்பை மீண்டும் தொடங்கினார்.

அதுமட்டுமில்லாமல் சூரத்தில் இருக்கும் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து, அந்த இடத்தில் முடங்கி இருக்கும் தெரு விலங்குகளை பராமரித்து வருகிறார். 35 நாய்கள், 40 பூனைகள் உட்பட 150 -க்கும் மேற்பட்ட விலங்குகளை இங்கு பராமரித்து வருகிறார்.

இந்த விலங்குகளால் மற்ற விலங்குகள் செய்யக்கூடிய அன்றாட வேலைகளை செய்ய முடியாது. இந்த விலங்கிற்கு தேவையான சிகிச்சை மற்றும் பராமரிப்பு அனைத்தையும் த்ரிஷா பார்த்துக் கொள்கிறார். இதற்காக தனது சேமிப்புகள் அனைத்தையும் இதில் செலவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் தனிப்பட்ட முறையில் கடன்களையும் வாங்கி இந்த விலங்குகளை பராமரித்து வருகிறார்.

அவரது குடும்பத்தினர்களும் நண்பர்களும் இவரது இந்த செயலை ஏற்கவில்லை, அவருக்கு ஆதரவு அளிக்கவில்லை. இருந்தபோதிலும் த்ரிஷா தனது நிலைப்பாடில் உறுதியாக இருந்துள்ளார்.

மருந்து வழங்குவது முதல் விலங்குகளுக்கு கழிப்பறையை பயன்படுத்த உதவுவது வரை எல்லாவற்றையும் இவரே கையாளுகிறார். இதுமட்டுமில்லாமல் சுமார் 450 தெரு விலங்குகளுக்கு இவரது கையால் உணவும் வழங்குகிறார்.

திரிஷாவின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *