
நானியின் ‘ஹிட் 3’ திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ.43 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
‘கோர்ட்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, நானி தயாரித்து நடித்துள்ள படம் ‘ஹிட் 3’. மே 1-ம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் முதல் நாளில் ரூ.43 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வசூலால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அடுத்தடுத்த மாதங்களில் பெரும் வசூல் படைக்கும் இரண்டு படங்களைக் கொடுத்திருக்கிறார் நானி.