
பெலகாவி: கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தில், தொழுகை நடத்துவதற்காக அரசு பேருந்தை ஓட்டுநர் ஒருவர் நிறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டினை விசாரிக்குமாறு வடமேற்கு கர்நாடக போக்குவரத்து கழகத்துக்கு மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
வடமேற்கு கர்நாடக போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், ஓட்டுநர் ஒருவர் பேருந்தை நிறுத்தி இருக்கையில் தொழுகை நடத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை விசாரிக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கடிதத்தில் அமைச்சர், "அரசுப்பணியில் இருக்கும் ஊழியர்கள் சில விதிகள் மற்றும் நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதைச் சொல்லவேண்டியது இல்லை. ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களுக்கான மதச் சுதந்திரம் உண்டு. என்றாலும் அவர்கள் பணியில் இருக்கும் போது அதில் கட்டுப்பாடுகள் உண்டு.