
மும்பை: பஹல்காம் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது, இரக்கமில்லாதது என்று தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீரில் அமைதியை கொண்டுவரும் போராளி என்று பாராட்டியுள்ளார். மும்பையில் நடந்த சர்வதேச ஆடியோ விஷுவல் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் (WAVES) உச்சி மாநாடு – 2025-ல் கலந்து கொண்ட ரஜினி இவ்வாறு தெரிவித்தார்.
மாநாட்டில் பேசிய ரஜினிகாந்த், "பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான இரக்கமற்றத் தாக்குதலுக்கு பின்னர், இந்த நிகழ்வின் பொருள் பொழுதுபோக்கு என்பதால் தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்க்க, அரசு இந்த நிகழ்ச்சியைத் தள்ளிவைக்கும் என்று பலர் என்னிடம் தெரிவித்தனர். ஆனால் இந்த நிகழ்வு நடக்கும் என்று நான் உறுதியுடன் இருந்தேன். ஏனெனில் நமது பிரதமர் நரேந்திர மோடி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.