
சென்னை: சென்னை பெருநகர காவல்துறையில் புலன் விசாரணை காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், நீதிமன்ற சாட்சியம் அளிக்க எழும்பூரில் தனி வீடியோ கான்பரன்ஸ் அறையை கூடுதல் காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.
இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் வழிகாட்டுதலின் கீழ், இணையவழி நீதிமன்ற விசாரணைகளுக்காக, சென்னை பெருநகர காவல்துறைக்கென நவீன வசதிகளுடன் கூடிய வீடியோ கான்பரன்சிங் அரங்கம் (Video Conferencing Studio) ஒரு முன்னோடி மெய்நிகர் சாட்சி அறை, சென்னை, எழும்பூரில் உள்ள கிழக்கு மண்டல காவல் இணை ஆணையாளர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டது.