
மதுரை புறப்பட்ட தவெக கட்சியின் தலைவர் விஜய் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அரசியல்வாதியாக முதன்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார் விஜய். இந்த சந்திப்பில் தன்னுடைய பயண திட்டம் குறித்துப் பேசியுள்ளார்.
“மதுரை விமான நிலையத்தில் நம் நண்பர்கள், நண்பிகள், தோழர்கள், தோழிகள் அனைவரும் இருக்கின்றனர். மதுரை மக்கள் எல்லோருக்கும் என்னுடைய வணக்கம். உங்கள் அன்புக்கு நன்றிகள்” எனப் பேசினார்.
மேலும் தன்னுடைய பயண திட்டம் குறித்து, “நான் இன்று ஜனநாயகன் படத்தின் வேலைக்காக செல்கிறேன். கொடைக்கானலில் சிறிய படபிடிப்பு உள்ளது.
சீக்கிரமாகவே மதுரை மண்ணில் நம் கட்சி சார்பாக மற்றொரு சந்தர்ப்பத்தில் உங்களைச் சந்தித்துப் பேசுகிறேன். ஆனால் இன்று நான் உங்களை கொஞ்ச நேரம் சந்தித்துவிட்டு என் வேலையைப் பார்க்க சென்றுவிடுவேன். நீங்கள் பாதுகாப்பாக உங்கள் வீடுகளுக்குச் செல்ல வேண்டும்.” என்றார்.

அத்துடன் ரசிகர்களுக்கு அறிவுரைக் கூறும் விதமாக, “என் வேனுக்கு பின்னாடி, காருக்கு பின்னாடி ஃபாலோ செய்வது, பைக்கில் வேகமாக வருவது, பைக் மேலே ஏறி நின்று ஓட்டுவது, ஹெல்மெட் இல்லாமல் வருவது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள்.
அதுபோன்ற காட்சிகளைப் பார்க்கும்போதே மனதுக்கு மிகவும் பதட்டமாக இருக்கிறது. கூடிய சீக்கிரமே உங்களை வேறொரு சந்தரப்பத்தில் சந்தித்துப் பேசுகிறேன்.
உங்கள் எல்லோருக்கும் எனது மே தின வாழ்த்துகள். லவ் யூ ஆல்” எனப் பேசிவிட்டு புறப்பட்டார்.