
புதுச்சேரி: புதுச்சேரியில் புதுப்பிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் நீண்ட இழுபறிக்கு பிறகு நாளை (மே 2) திறக்கப்படுகிறது.
புதுவை மறைமலை அடிகள் சாலையில் புதிய பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறைபாட்டால் முழுவதுமாக இடிக்கப்பட்டு, புதிதாக கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.29.50 கோடி செலவில் பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது.