
நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேர்காணல் ஒன்றில் ரஷ்யா – உக்ரைன் போர் குறித்து பேசியுள்ளார்.
“புதினுக்கு முழு உக்ரைனுமே வேண்டும் என்று நினைக்கிறேன். நான் மட்டும் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால், அவர் முழு உக்ரைனையும் எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன்.
நான் இருந்திருந்தால், அவர் உள்ளேயே சென்றிருக்க முடியாது. இந்தத் தோல்வியார்கள் குழுவினால் தான், அவர் உள்ளே சென்றுள்ளார்.
அவர் ஆப்கானிஸ்தானில் நடந்ததை பார்த்து, ‘இது தான் நமக்கான வாய்ப்பு’ என்று நினைத்திருப்பார்” என்று கூறியிருக்கிறார்.
ஆரம்பத்தில் இருந்து சமீபமாக வரை, ‘புதின் என்னுடைய நண்பர்… பேச்சுவார்த்தை நடத்துவோம்’ என்று ரஷ்யாவிற்கும், புதினுக்கும் ஆதரவாக பேசி வந்த ட்ரம்ப், ரஷ்யா உக்ரைன் மீது நடத்தும் தொடர் தாக்குதலால் ட்ரம்ப் மிகுந்த கோபம் அடைந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி தோல்வி பேச்சுவார்த்தையினால், அப்போது கையெழுத்து ஆகவிருந்த அமெரிக்கா – உக்ரைன் கனிமவள ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் போனது.
இரண்டு மாதங்களுக்கு பிறகு, நேற்று இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக கையெழுத்தாகி உள்ளது.
இதன் மூலம், அமெரிக்கா உக்ரைன் பக்கம் நிற்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.