
ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதற்கு ஆகும் கட்டண விதிமுறைகளை மாற்றி அறிவித்திருந்தது இந்திய ரிசர்வ் வங்கி. அவை இன்று முதல் (மே 1) அமலுக்கு வர இருக்கிறது.
என்ன மாற்றம்?
வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களின் ஏ.டி.எம்களில் இருந்து ஐந்து முறை இலவசமாக பணம் எடுக்க முடியும்.
வங்கி கணக்கு இல்லாத வங்கி அல்லது நிதி நிறுவனங்களின் ஏ.டி.எம்களில் இருந்து நகரங்களில் மூன்று முறையும், கிராமப்புறங்களில் ஐந்து முறையும் இலவசமாக பணம் எடுத்துகொள்ளலாம்.
அதற்கு மேல் இருந்தால்…
புதிய அறிவிப்பின் படி, குறிப்பிட்ட அளவுக்கு மேல், ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் ரூ.23 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.
ஏன் இந்த மாற்றம்?
நாம் வங்கிகளில் பணம் எடுக்கும்போது, அதற்கான சேவைக் கட்டணம் வங்கிகளுக்கு கொடுக்க வேண்டியதாக இருக்கும். அதனால், அந்த சேவைக் கட்டணத்திற்காக தற்போது இந்திய ரிசர்வ் வங்கி இந்த விலை ஏற்றத்தை அறிவித்துள்ளது.
நாம் பிற வங்கிகளின் ஏ.டி.எம்களில் பணம் எடுக்க, நமது வங்கிகள் அந்த வங்கிகளுக்கு கட்டணங்களை செலுத்தும். அதை ஈடுகட்டும் விதமாக, பிற வங்கிகளின் ஏ.டி.எம்களில் பணம் எடுக்கும்போது, கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நேற்று வரை, இந்தக் கட்டணம் ரூ.21 வரை தான் வசூலிக்கப்பட்டது. இன்று, புதிய அறிவிப்பின் படி, ரூ.23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.