பாலிவுட்டில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ஷாருக்கான் இருக்கிறார். கடந்த ஆண்டு கூட ஷாருக்கானின் இரண்டு படங்கள் ரூ.2000 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதனால் உலக பணக்கார நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

உலக அளவில் பணக்கார நடிகர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதில் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் 10-வது இடத்தில் ஜாக்கிசென் இருக்கிறார். அதேசமயம் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் இருக்கிறார்.

அர்னால்டுக்கு 1.49 பில்லியன் டாலர் அளவுக்கு சொத்துள்ளது. அர்னால்டு ரியல் எஸ்டேட் மற்றும் முதலீட்டு நிறுவனத்தில் பெரியளவில் முதலீடு செய்திருக்கிறார்.

உலக பணக்கார நடிகர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் டுவைன் “தி ராக்” ஜான்சன் இருக்கிறார். இவருக்கு 1.19 பில்லியன் டாலர் அளவுக்கு சொத்து இருக்கிறது.

டுவைன் ‘தி ராக்’ ஜான்சன் மல்யுத்தப்போட்டியில் கலந்து கொண்டு பெரிய அளவில் புகழ் பெற்றார். அதன் பிறகு படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

டுவைன் “தி ராக்” ஜான்சன் நடிக்கும் ஹாலிவுட் படங்கள் வசூலுக்கு உத்தரவாதம் கொடுப்பதால் அவருக்கு அதிக அளவில் வரவேற்பு இருக்கிறது. இப்பட்டியலில் 3-வது இடத்தில் இருப்பவர் டோம் குரூஸ். இவருக்கு 891 மில்லியன் டாலர் அளவுக்கு சொத்து இருக்கிறது.

ஷாருக்கான்
ஷாருக்கான்

ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விளங்கும் டோம் குரூஸ் திரையில் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் 7 ஆயிரம் டாலர் வாங்குவதாக சொல்வதுண்டு. வட அமெரிக்கா முழுக்க இவருக்கு சொத்து இருக்கிறது.

நான்காவது இடத்தில் நடிகர் ஷாருக்கான் இருக்கிறார். ஷாருக்கான் ஹாலிவுட்டில் நடிக்கவில்லை. ஆனாலும் உலகம் முழுவதும் அறியப்படும் நடிகராக ஷாருக்கான் இருக்கிறார்.

இவருக்கு 876.5 மில்லியன் டாலர் அளவுக்கு சொத்து இருக்கிறது. நடிப்பு மட்டுமல்லாது திரைப்படங்கள் தயாரிப்பு, ஐ.பி.எல் அணி என பல்வேறு தொழில்களையும் ஷாருக்கான் செய்து வருகிறார். இது தவிர பல தொழில்களில் முதலீடும் செய்திருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *