
புதுடெல்லி: நாட்டில் உள்ள 513 பெண் எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏ.க்களில் 512 பேர் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஏடிஆர் என்ற தேர்தல் உரிமைகள் அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது: மக்களவையில் உள்ள 75 பெண் எம்.பி.க்களில் 6 பேரும், மாநிலங்களவையில் உள்ள 37 பெண் எம்.பி.க்களில் 3 பேரும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 400 பெண் எம்எல்ஏ.க்களில் 8 பேரும் கோடீஸ்வரிகள்.
ஆந்திராவில் அதிகபட்சமாக 24 பெண் எம்எல்ஏ.க்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். 78 பெண் எம்எல்ஏ.க்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளும் உள்ளன. இவ்வாறு எடிஆர் நிறுவனம் தெரிவித்துள்ளது.