
தொடர்ச்சியாக காங்கிரஸ் வசம் இருந்த சிவகாசி நகராட்சியானது கடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸை ஒதுக்கிவிட்டு மேயர், துணை மேயர் பதவிகளை திமுக கைப்பற்றியது. இப்போது அடுத்த அதிரடியாக சிவகாசி எம்எல்ஏ பதவியையும் காங்கிரஸிடமிருந்து கைப்பற்றுவதற்கான முயற்சிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னெடுத்து வருவதாகச் சொல்கிறார்கள்.
1920-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட சிவகாசி நகராட்சியின் நூற்றாண்டு வரலாற்றில் 2011-ல் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. மற்ற அனைத்துத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியே சிவகாசி நகர்மன்ற தலைவர் பதவியை கைப்பற்றி உள்ளது. திமுக ஒரு முறை கூட நகர்மன்றத் தலைவர் பதவியை கைப்பற்றியதில்லை. கடந்த உள்ளாட்சி தேர்தலில் இந்த பாரம்பரியத்தைச் சொல்லி, முதல் மேயர் பதவியை கைப்பற்ற காங்கிரஸ் காய் நகர்த்தியது.