
ஏப்ரல் 26 முதல் (வாக்கியப் பஞ்சாங்கப்படி) உங்கள் ராசியிலிருந்து விலகி, 12-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் ராகு பகவான். அதேபோல், கேது பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் நின்று பலன் தரப்போகிறார். இந்த ராகு- கேது பெயர்ச்சிக் காலத்தில், பிணிப்பாதிப்புகள் விலகி, தேகம் பொலிவு பெறும்; சந்தோஷம் மலரும்.
ராகு பகவான் தரும் பலன்கள்
1. ராகு பகவான் உங்கள் ராசியிலிருந்து விலகுவதால், இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கணவன் – மனைவி ஒன்று சேர்வார்கள். உங்களை ஏமாற்றியவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.
2. உங்களை அலட்சியப்படுத்தியவர்கள் எல்லாம் இப்போது உங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்வார்கள். வரவேண்டிய பணம் தாமதம் இல்லாமல் வரும். வீட்டில் சுபகாரியங்கள் தொடரும். பழைய உறவினர்கள், நண்பர்கள் வெகுநாள்களுக்குப் பிறகு உங்களைத் தேடி வருவார்கள்.
3. ஆன்மிகவாதிகளின் ஆசி கிட்டும். வெளிநாட்டுப் பயணம் திருப்திகரமாக அமையும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள்.
4. சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிட்டும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி நடைபெறும். உடல்நிலை மேம்படும். அலர்ஜி, தோலில் இருந்த நமைச்சல் நீங்கும். விபத்துகளிலிருந்து மீள்வீர்கள்.
5. வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்ய பணம் வரும். உத்யோகத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் உயரதிகாரியைக் கவர்வீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. கலைஞர்கள், புது வாய்ப்புகளால் புகழ் அடைவார்கள்.
கேது பகவான் தரும் பலன்கள்
6. கேது உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் பிரச்னைகளைச் சமாளிக்கும் சக்தியைக் கொடுப்பார். எதிரிகள் நண்பராவார்கள். இழுபறி யான வழக்குகள் சாதகமாகும்.வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.
7. ஷேர் மூலம் பணம் வரும். சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகளின் உணர்வுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். பழைய சொத்தை விற்றுவிட்டுப் புதிய சொத்து வாங்குவீர்கள். உங்களில் சிலர், கௌரவப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். புத்தி சாதுர்யத்துடன் பேசி சில வேலைகளை முடிப்பீர்கள். கையில் காசு பணம் தங்கும்.

8. வியாபாரத்தில் போராட்ட நிலை நீங்கும்; பற்று-வரவு எதிர்பார்த்தபடி அமையும். திடீர் லாபம் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் உங்களை வெறுத்த மேலதிகாரி இனி வலிய வந்து பேசுவார். உங்களின் கடின உழைப்புக்காக பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு.
9. திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோயிலுக்குச் சென்று வராகரைத் தரிசித்து வழிபட்டு வாருங்கள். அவர் அருளால் தோஷங்கள் விலகும். ஞாயிறு மற்றும் பெளர்ணமி தினங்களில், புற்று உள்ள அம்மன் கோயில்களுக்குச் சென்று சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து வழிபடுங்கள்; சகல நன்மைகளும் உண்டாகும்.