
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற கோடை விடுமுறையில் அவசர வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு விடுமுறைகால நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மே1-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் அவசர வழக்குகளைவிசாரிக்க விடுமுறை கால நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் மே 7 மற்றும் மே 8 ஆகிய தேதிகளில் நீதிபதிகள் என்.மாலா, ஜி.அருள்முருகன், எல். விக்டோரியா கவுரியும், மே 14 மற்றும் மே 15 ஆகிய தேதிகளில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி,லட்சுமிநாராயணன், எம். நிர்மல்குமார் ஆகியோரும், மே 21 மற்றும் மே 22 ஆகிய தேதிகளில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமிநாராயணன், என். செந்தில்குமார் ஆகியோரும், மே 28 மற்றும் மே 29 ஆகிய தேதிகளில் நீதிபதிகள் செந்தில்குமார் ராமமூர்த்தி, ஜெ.சத்யநாராயண பிரசாத், கே.ஜி.திலகவதி ஆகியோரும் அவசர வழக்குகளை விசாரிப்பர்.