• April 30, 2025
  • NewsEditor
  • 0

புனே விமான நிலையத்திற்குள் சிறுத்தை ஒன்று நுழைந்து சுற்றிப் பார்த்த சம்பவம் பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

விமான நிலையத்தில் காலை 7 மணிக்குத் தடுப்புச் சுவரில் ஏறிக் குதித்து விமான நிலையத்திற்குள் வந்த சிறுத்தை அங்கு விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பகுதியைச் சுற்றிப் பார்த்ததைப் பயணி ஒருவர் தனது மொபைல் போனில் பதிவு செய்து அதனைச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதே சிறுத்தை மீண்டும் சாப்பிட எதாவது கிடைக்குமா என்று பார்ப்பதற்காக விமான நிலையத்திற்குள் மீண்டும் வந்து சுற்றிப் பார்த்தது.

விமான ஓடுதளத்தில் இருந்து வெறும் 500 மீட்டர் தூரத்தில் இந்த சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்டது. இதையும் பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைத்தள பக்கத்தில் பகிர, வீடியோ வைரலானது.

விமான நிலையத்திற்குள் ஏறி குதித்த சிறுத்தை

சிறுத்தை விமான நிலையத்திற்குள் வந்ததால் விமானச் சேவையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் இந்த சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர்.

ஒரே நாளில் இரண்டு முறை விமான நிலையத்திற்குள் நுழைந்த சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினரின் உதவியோடு விமான நிலைய அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

சிறுத்தை விமான நிலையத்திற்குள் எங்காவது பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் விமானங்கள் பார்க்கிங் செய்யப்பட்டுள்ள பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சிறுத்தை விமான நிலையத்திற்குள் நுழைந்தது தொடர்பாக விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் விமானப்படை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

புனே விமான நிலையத்தை விமானப்படையும் பயன்படுத்தி வருகிறது. இக்கூட்டத்தில் சிறுத்தையை உடனே பிடிக்க நடவடிக்கை எடுக்க வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இச்சம்பவத்தால் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்களும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர்.

அவர்கள் மாலை நேரத்தில் விரைவில் கதவைப் பூட்டிக்கொள்கின்றனர். இரவு நேரத்தில் வீட்டிற்கு வெளியில் வரப் பயப்படுகின்றனர்.

இது குறித்து விமான நிலையத்திற்குள் அருகில் வசிக்கும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ரஞ்சித் ஷிண்ட் கூறுகையில், ”சிறுத்தையின் நடமாட்டத்தால் இரவில் அவசரத்திற்குக்கூட எங்களால் வெளியில் செல்ல முடியவில்லை. சிறுத்தையை உடனே பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *