• April 30, 2025
  • NewsEditor
  • 0

‘சென்னை vs பஞ்சாப்!’

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான டாஸை பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார்.

Dhoni

ஓய்வு பற்றி தோனி!

டாஸில் சென்னை அணியின் கேப்டன் தோனி பேசுகையில், டேனி மோரிசன், ‘இந்த ஆதரவை பார்க்கையில் நீங்கள் அடுத்த ஆண்டும் வர வேண்டும் போலயே…’ எனக் கேட்க, அதற்கு தோனி,’நான் அடுத்தப் போட்டிக்கு வருவேனா என்றே தெரியாது.’ என ஜாலியாக கூறினார்.

மேற்கொண்டு பேசிய தோனி, ‘உங்களின் உள்ளூர் மைதானத்தில்தான் நீங்கள் அதிக போட்டிகளில் ஆடுகிறீர்கள். அப்படியிருக்க ஹோம் அட்வாண்டேஜை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாங்கள் அதை செய்யவில்லை. இந்தப் போட்டியில் எங்கள் லெவனில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கமாக நாங்கள் லெவனில் அவ்வளவாக மாற்றங்களை செய்வதில்லை.

தோனி
தோனி

ஆனால், இந்த முறை அப்படியில்லை. அதற்கான காரணம் எளிமையானது. எங்கள் அணியின் பெரும்பாலான வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் ஒன்றிரண்டு வீரர்களைத்தான் மாற்ற வேண்டியிருக்கும். மெகா ஏலத்துக்கு பிறகு நடக்கும் சீசன் என்பதால் இந்த சீசனில் எங்களுக்கு அப்படி நடக்கவில்லை.’ என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *