
கேரளாவில் ‘துடரும்’ படத்தின் வசூல் அனைவரும் வியப்பூட்டும் வகையில் அமைந்திருக்கிறது. ‘எம்புரான்’ படத்துக்கு எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, எந்தவித விளம்பரமும் இன்றி வெளியான படம் ‘துடரும்’. தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் முதல் காட்சி முடிந்தவுடனேயே, பலரும் இப்படத்தினைக் கொண்டாடத் தொடங்கினார்கள்.
முதல் நாள் 2-வது காட்சியில் இருந்து படத்தின் வசூல் இறங்கவே இல்லை. 2 நாட்களில் ரூ.40 கோடியை கடந்தது. இதனால் வர்த்தக நிபுணர்கள் பலரும் வியப்படைந்தார்கள். வார நாட்களிலும் தொடர்ச்சியாக நல்ல வசூல் செய்து வருகிறது. இதனால் கேரளாவில் மட்டுமே மொத்த வசூல் ரூ.100 கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது. இந்த வசூலை ‘எம்புரான்’ தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.