
மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலின் கிரிவலப்பாதையில் அடிப்படை தேவைகளை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வரும் நிலையில், கோயில் நிலத்தில் அனுமதியின்றி பணி செய்வதா என கோயில் நிர்வாகம் முட்டிக் கொள்வதால் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. மலைமீது சுயம்பு மூர்த்தியாக சுவாமி வேதகிரீஸ்வரர் அருள்பாலிப்பதால், பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.