
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள மங்களூருவில் கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பிய நபர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் 12 பேரை கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று முன் தினம் உள்ளூர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதனை நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த 30 வயதான ஒருவர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கம் எழுப்பியதாக கூறப்படுகிறது. அவரை சச்சின் (26) என்பவர் கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து 20-க்கும் மேற்பட்டோர் கும்பலாக சேர்ந்து அந்த நபரை சரமாரியாக தாக்கினர்.