
சென்னை: மே தினத்தை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மே 1-ம் தேதி மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மே தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை விதிகளின் படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், ஹோட்டல்களை சார்ந்த பார்கள் மற்றும் மதுபான விற்பனையகங்கள், மதுபான கூடங்கள் மே 1-ம் தேதி மூடப்படும். அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.