
சென்னை: காவல், சிறைத் துறை, தீயணைப்புத் துறைக்கு புதிதாக 3,363 காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு, முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.
தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிவிப்புகளில் கூறியிருப்பதாவது: கோவை – நீலாம்பூர், சிவகங்கை – கீழடி, திருநெல்வேலி – மேலச்செவல், திருப்பூர் – பொங்கலூர், கள்ளக்குறிச்சி – களமருதூர், நாமக்கல் – கொக்கராயன்பேட்டை, திருவண்ணாமலை – திருவண்ணாமலை கோயில், மதுரை – சிந்தாமணி மற்றும் மாடக்குளம் ஆகிய பகுதிகளில் புதிதாக காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்.