• April 30, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பஹல்​காம் தாக்​குதல் தொடர்​பாக மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங், முப்​படைகளின் தலைமை தளபதி அனில் சவு​கான் மற்​றும் ராணுவம், கடற்​படை, விமானப்​படை தளப​தி​கள், தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் ஆகியோ​ருடன் பிரதமர் மோடி நேற்று முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​னார். எப்​போது, எங்​கு, எவ்​வாறு தாக்​குதல் நடத்​து​வது என்​பதை பாது​காப்​புப் படைகளே முடிவு செய்​ய​லாம் என்​றும், முப்​படைகளும் சுதந்​திர​மாக செயல்​படலாம் என்​றும் இக்​கூட்​டத்​தில் பிரதமர் தெரி​வித்​தார்.

கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்​காம் பகு​தி​யில் பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் 26 சுற்​றுலாப் பயணி​கள் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதலின் பின்​னணி​யில் பாகிஸ்​தான் ராணுவம் மற்​றும் அந்​நாட்டு உளவுத் துறை இருப்​பது தெரிய​வந்​துள்​ளது. இதனால் இரு நாடு​களிடையே போர் பதற்​றம் ஏற்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *