
வட இந்தியாவைச் சேர்ந்த இன்ஃப்ளுயன்சர் ஒருவர், வீட்டின் மாடிப் பகுதியில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கும்போது இடையில் வந்த இளைஞர் அந்தப் பெண்ணை தகாத முறையில் தொடும்படியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரீல்ஸ் மூலம் தங்களின் அன்றாட வேலைகள் குறித்து வீடியோ பதிவிட்டு வருகின்றனர். சமையல் தொடங்கி சமுதாய கருத்துகள் வரை பல விஷயங்களை ரீல்ஸ் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் வட இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் சந்தித்த ஒரு சம்பவம் குறித்து வீடியோவாக 2 நாள்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவர் வீட்டின் மாடிப்பகுதி ஸ்னாப் எடுத்துக் கொண்டிருக்கும்போது இடையில் வந்த ஒரு நபர் அவர் மீது தொட்டுவிட்டு மாடி படியின் மேலே ஏறிச் செல்கிறார்.
வேகமாக அந்த பெண், அந்த நபரின் கையைப் பிடித்து எச்சரிக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் அந்த நபரை அந்தப் பெண் அறைந்து விடுகிறார்.
இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவிட்டு, “அந்த நபர் அடிக்கடி இது போன்று என்னிடம் நடந்து கொள்வார். நான் வீடியோ ஆதாரத்துடன் அவரது வீட்டிற்குச் சென்று குடும்பத்தினரிடம் காட்டிய போது அவரது மனநலம் மோசமாக இருப்பதாக குடும்பத்தினர் கூறினார்கள்.
இந்த மனநோய் எந்த கோணத்தில் இருந்து தோன்றுகிறது? என் உடையை வைத்து மக்கள் என்னை மதிப்பிடுகிறார்கள் நான் நல்ல உடை அணிந்து இருந்தாலும் இது போன்ற விஷயங்கள் நடக்கத்தான் செய்கிறது. அந்த நேரத்தில் நான் சேலை அணிந்து இருந்தாலும் அல்லது சுடிதார் அணிந்திருந்தாலும் இதே போல் தான் நடந்திருக்கும் என்பது எனக்கு தெரியும்” என்று கூறியிருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி பலரும் இதற்கு தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.