• April 29, 2025
  • NewsEditor
  • 0

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வழக்கு நாட்டையே அதிரவைத்தது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் அம்பலமாகி 6 ஆண்டுகள் ஆகிவிட்டன. “அண்ணா பெல்ட்டால அடிக்காதீங்க” எனக் கண்ணீர் மல்க கெஞ்சியது தொடங்கி, “டேய் உன்னை நம்பித்தானே வந்தேன் இப்படி ஏமாத்திட்டியே” என்று இளம் பெண்கள் கதறி அழுததை யாரும் மறந்துவிட முடியாது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹெரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். சிபிஐ விசாரணை நடத்தி வந்தது.

கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிறைவு பெற்றது. அரசு சார்பில் 50க்கும் மேற்பட்ட சாட்சியங்கள், 200க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. பாதிக்கப்பட்ட 8 பெண்கள் கைது செய்யப்பட்ட 9 பேர்களுக்கு எதிராக சாட்சி அளித்துள்ளனர்.

திருநாவுக்கரசு
வசந்த், சபரிராஜன், சதீஷ்
மணிவண்ணன்
அருளானந்தம்
அருண்குமார்
பாபு
ஹெரோன் பால்

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் வருகிற மே 13-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நேற்று மாலை அறிவிப்பு வெளியானது. அந்த தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே ஒரு அதிர்ச்சி தகவலும் வெளியானது.

நீதிபதி மாற்றமும், விளக்கமும்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த, கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, கரூர் மாவட்ட குடும்ப நல நீதிபதியாக மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதனால் பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு என்னவாகும் என்ற சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து நீதிமன்ற வட்டாரத்தில் விசாரித்தபோது, “தமிழ்நாடு முழுவதும் 77 மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது வழக்கமான ஒன்றுதான். நீதிபதி நந்தனி தேவி பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பை வழங்கிய பிறகு தான், கரூர் நீதிமன்றத்துக்கு பணி மாறுதல் ஆவார்.” என்று கூறினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *