
ரெய்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை கண்டறியும் சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதில் ரெய்கர் மாவட்டத்தில் உள்ள கோபாதாரை என்ற கிராமத்தில் சந்தேகப்படும்படி சிலர் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த மாவட்டத்தில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, யாகூப் ஷேக் என்பவரின் வீட்டில் தங்கியிருந்த இப்திகர் ஷேக் (29) மற்றும் அர்னிஷ் ஷேக் (25) ஆகிய 2 பாகிஸ்தானியர்களை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் போலி ஆவணங்களை கொடுத்து சட்டவிரோதமாக இந்திய வாக்காளர் அட்டை பெற்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவரும் பாகிஸ்தானின் கராச்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.