
ரஜினியின் பாபா, கமலின் வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான், விஜய்யின் கில்லி, அஜித்தின் வாலி, தினா உள்பட பல படங்கள் ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில் விஜய் நடித்து 2005-ம் ஆண்டு வெளி யான ‘சச்சின்' படத்தை, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ரீரிலிஸ் செய்தார். கடந்த 18-ம் தேதி வெளியிடப்பட்ட இந்தப் படம் நல்ல வசூலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இந்தப் படக்குழு சக்சஸ் மீட் நடத்தியது. இதில் தயாரிப்பாளர் தாணு, சச்சின் பட இயக்குநர் ஜான் மகேந்திரன், இசை அமைப்பாளர் தேவி பிரசாத், நடன இயக்குநர் ஷோபி கலந்து கொண்டனர்.